தேர்வு
பயின்றதைச் சோதிக்கவே தேர்வு : அதனால்
பயின்றவருக்கு ஏற்படாது மனச்சோர்வு.
படித்து முடித்த மாணவர்கள் தேர்வினை
முடித்து மகிழ்ச்சி அடைவர்.
பயம் கொண்டு தேர்வை எழுதுபவருக்கு
ஜெயம் என்றும் வராது.
படிக்காத மாணவர்களுக்கு தேர்வு என்பது
பிடிக்காத ஒன்றே ஆகும்.
நாட்டம் முழுவதும் படிப்பினில் இருக்க
வாட்டம் போயிடும் தேர்வினில்.