நான் கண்ட பெண்
இவள் கருவில் நெளிந்தவள் அல்ல
அந்த காமன் போக்கிய பழி...
வெறும் கருமையும் வெண்மையும்
கலந்தது அல்ல
இரு சிற்பிகள் செதுக்கிய விழி...
பூங்காற்று கூட திசை குழம்பிடும்
இவள் நடந்து செல்லும் வழி
மனிதரால் எழுதிய இனம் அல்ல
இவள் இயற்கை வடித்த சிலை...
தசையும் எழும்பும்
திகழ்ந்தவன் உடலில்
ஊனில் மலர்ந்த ஓர் முல்லை...
உதிரமே வழிந்தோடும் எனில்
உன்னை தவிர வேறொருத்தி இல்லை....