நட்பு...

பாலைவனத்தில் கிடைத்த நீராய்
வந்தாய் நீ எனக்கு...

தனியாக செல்லும் பாதைகளில் எல்லாம்
துணையாக வந்தாய் நீ...

துயரப்படும் வேளைகளில் எல்லாம்
தோள்கொடுத்தாய் நீ...

ஆகாயம் வரை கூட செல்லமுடியும் என்னால்
நீ என்னருகில் இருந்தால்...

உனக்கென என்ன செய்தேன் நான் உன்னிடம்
உண்மையாய் இருந்ததை தவிர...

இதுதான் நட்பென்பதா...

துளி தூறல் அது நின்றாலும்
மரம் தரும் சாரல் நிற்பதில்லை...

அது போல் நீ எங்கிருந்தாலும்
என் நினைவுகள் உன்னை மறப்பதில்லை...

எழுதியவர் : anusha (6-Dec-11, 2:34 pm)
Tanglish : natpu
பார்வை : 756

மேலே