என் உயிர் தோழிக்கு இறுதியாய் ஒரு கடிதம்


என் உயிர் தோழிக்கு இறுதியாய்

ஒரு கடிதம் ....................................

எழுத நினைத்து வார்த்தைகளும்

மல்யுத்தம் செய்யும் என் மனதோடு

உன்னை பிரிய நினைத்தால்

நலம் விசாரித்து ஆரி போன கடிதத்தில்

இருக்கும் என் நினைவுகள் எப்படி தெரியும்

உனக்கு கடிதம் பிரிக்காமல் படிக்காமல்

உணர்வுகள் ஒன்றானதால் நட்பை நேசித்தோம்

நட்பால் நேசித்தோம் நன்றி சொல்லி

நட்பை சேத படுத்த மனமில்லை

அதனால் சேதபடுத்தி கொள்கிறேன் என் மனதை

அதை உன்னிடம் சொன்னாலும் உனக்கு

வலிக்கும் என்பதால் சொல்லாமல் விட்டாலும்

என் மனதோடு இருக்கும் உன் நட்பிற்கு

தெரியாமலா போகும் என் வேதனைகள்

பழக தொடங்கிய நாட்களில் உன்னுடன்

பேசாத நாள் இல்லை

இன்றும் அப்படிதான் பேசாத நாள் எனக்கு நாள்

இல்லை

உன் தோல் சாய்ந்து உன்னிடம் கவலைகளை

விட்டு செள்கையில்தான் உணர்வேன்

அதற்க்கு முடிவு வந்தததாய்

முடிவில்லா நட்புக்கு முடிவுரை சொல்லும் நேரம்

விதியால் நானும் சொல்லாமல் சொல்லட்டுமா

நட்புக்கான முடிவுரையை

இனி ஒரு ஜென்மம் இருந்தால் அபோதாதவது

அருகருகே பிறப்போம் அதே நட்பை நேசிக்க

பிரிகிறேன் என்ற வார்த்தை மட்டுமே சொல்ல

முடிகிறது மனது பிரியாமல் உனதுநட்பை

கடைசி நொடியில் வருவாயா

என்ற ஏக்கத்துடன் நட்பின் வாசலில் நான்

எழுதியவர் : ருத்ரன் (5-Dec-11, 6:14 pm)
பார்வை : 1280

மேலே