மன்னிக்க வேண்டுகிறேன்...



என் விளக்கமான கேள்விகளின் விடை ...

தெரியாமல்...

விட்டுவிட்ட மாதுவினால்...

மது என்னை ஆட்க்கொண்டதோ...

அனுதினமும் அதிகாலை துயில் எழும்ப...

அருவருத்து போகிறது என் மனநிலை....

சூழ்நிலைகுற்றவாளியகத்தான்... மாறிபோனேன்.... நான்...

என் நிம்மதியை தொலைத்து நிற்கும்...

என்னிடம்....

சுடுசொற்களால் சூடு வைக்கும் ...

என் தாயின் மீது.... கோபம் வருவதில்லை....

அவள் கோபம் நியாயமானதே....

மதுவின் வழியே ஆனந்தம் தேடும் போது மட்டும்...

அவளை மறக்கசொல்கிறது என் உல் ஞானம்...

இரவு முடிந்து விட்டால்... மறுத்து விடுகிறது ....

என் மனம்.... அவளை மறக்க....

தொண்டைக்குழியில் நின்றுவிட்ட விஷமாய் போனதோ....

அந்த மாதுவின் நினைவு...

என் தாயின் புலம்பலுக்கும்...

அர்த்தம் உண்டு... அவள் புலம்புவதை....

நான்,,,,,

மதிப்பது கூட அவளுக்கு தெரியாத உண்மை...

மாதுவின் காதலை ...

என் தாயிடம் சொல்லநேர்ந்த தருணம்....

இணக்கமே அவளுக்கும்... என் சந்தோசத்திற்காக...

ஆமோதித்த அவள்..

நான் தோற்றதை உணர்ந்து என்னை தேற்றவில்லையே...

மாறாக தூற்றினால்... எனக்கே பயம்தான்....

எங்கே நான் புத்திசுவாதினம் இழந்து விடுவேனோ என???


எழுதியவர் : காளிதாசன்... (6-Dec-11, 4:08 pm)
பார்வை : 242

மேலே