நண்பர்களுக்காக

நண்பனே!
எனக்கு பசி என்கிற உணர்வு
நரம்புகள் வழியே நடந்து
மூளைக்கு செல்லும் முன்
உன் விரல்கள்
என் உதடுகளுக்கு
உணவை
ஊட்ட வந்துவிடும்..

நான் உன்னை மிதித்தால் கூட
என் காலில் இருக்கும்
கரையை கழுவ சொல்லிவிட்டு
கனகலங்கி செல்லும் காந்தி நீ...

நான் கவிதை எழுதி
பெரிய கம்பன் என்ற பெயரை விட
உன் நண்பன் என்ற பெயரையே
பெருமையாக நினைக்கிறேன்..

உன்னை பற்றி கவிதையில்
அதிகம் எழுதி
அனைவரையும்
உள்ளம் உருக வைக்க
எனக்கு உடன் பாடு இல்லை
ஆகையால்
ஒன்றை மட்டும் உனக்கு சொல்லுகிறேன்.

நண்பா.....

என் அம்மாவுக்கும்
உனக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?
என்னை நீ வயற்றில் சுமக்கவில்லை
அவ்வளவுதான்..

----நட்போடு---
...தமிழ்தாசன்...

எழுதியவர் : ----தமிழ்தாசன்---- (8-Dec-11, 12:55 am)
பார்வை : 534

மேலே