நண்பனுக்கான பிறந்தநாள் வாழ்த்து
பொழியும் முன் பொலிவான
கார்மேக வண்ணம்
என்றும் கலையாமலும்
அடர்ந்து வளர்ந்த
இமைகளின் கிழே
அழகாய் சிமிட்டும் போது
வெளிப்படும் கருமணிகள்
கண்ணீரை அறியாமலும்
இதழோரம் சிந்தும்
சிக்கனப் புன்னகை
எப்போதும் சிதையாமலும்
இளைமைக்கு எடுப்பான
இழைத்து போன தோற்றம்
என்றும் மாறாமலும்
தோல்விகள் எல்லாம்
தொலை தூரம் போக
வலிகள் எல்லாம்
வழி மாறி போக
வாழ்க்கையின் பருவ
வசந்தங்களை நீ ரசிக்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
..