கானல் நீர்
![](https://eluthu.com/images/loading.gif)
"" தூங்கவிடவில்லை உன் நினைப்பு
இருந்தும் தூங்கினேன் உன் நினைவுகளுடன்.
"" முதன் முதல் என் அருகில் நீ அமர்ந்ததும்
உன் கண்களை பார்க்க முடியாமல்
உன் பாதங்களை பார்த்தேன்.
"" முதன் முதன் உன் ஸ்பரிசத்தை
தொட்டபோதுதான் உணர்ந்தேன்
என் பிறவி பயனை.
"" என்னை விட்டு நீங்கி செல்ல
நீ நினைக்கும் பொழுது
உன்னை தடுக்க நான் எழுந்தேன்
கனவு எனும் கானல் நீருடன்.