ஊரும் உறவும்

பல ஆண்டுகள்
பண்போடு பழகிய உறவுகள்
பாசம் மட்டுமே
பரிமாறி மகிழ்ந்திருந்த சந்தோசங்கள்
காதல் என்று
ஊரார் பேசி மகிழ்ந்தும்
உடையாத இதயம்
சுக்கு நூறாய் உடைந்தது
உறவுகள் பேசியபோது
இன்று இணைந்தோம் நாங்கள்
மகிழ்ச்சியில் உறவுகள்
இன்றும் வாழ்கிறோம் அழுகையோடு .......!