சம்மதமா காதலியே...



விடியலை நோக்கி மெல்ல நகரும் இரவினை போல...

உன் ஒற்றை வார்த்தை எதிர்நோக்கி நகர்கிறது என் இல்லத்தின்

நாட்காட்டி பதிவேடுகள்...

பனித்துளி விலக்கும் பகலவனை போல் ...

என் அன்பின் ஆதிக்கத்தை விலக்கிவிடாதே...

செதுக்கினால்தான் சிற்பம் ...

கல்லாக நானிருக்கிறேன்...

உளியாக நீ இரு...

நம் வாழ்க்கை சிற்பம் வடிவமைப்போம்...

உன் இதய வாயிலில் தான் என் சொல்வனமென்னும்

தோட்டமிருக்கிறது..

சம்மதம் என்னும் தண்ணீரை தெளி...

தழைக்கட்டும் நம் தலைமுறை...

எழுதியவர் : காளிதாசன்... (12-Dec-11, 5:19 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 191

மேலே