இழப்பு உனக்குதானே ....



தோல்வியுற்ற நம் காதலை புதிப்பித்துக்கொள்ள ....

உன்னை தேடி நான் வருவதில்லை ... என்னுடைய

தனிப்பட்ட தோல்வியாகவும் நான் எடுத்துக்கொள்ளவில்லை...

இருவரும்தான் மனமுவந்து நேசித்தோம்...

இருவருக்குமான தோல்வி இதுவென நான் நினைப்பதை...

ஆமோதிக்க மறுக்கும் எனதன்பு காதலியே...

சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொண்டு உன் சந்திப்பில்

நெகிழ்வு படும் வேலை ....

சந்திப்பின் சாராம்சத்தை வாய்திறவாமல் ஊமையாய் நின்று...

கடைசி வரை என் வாழ்வை கேள்விக்குறியாய் மாற்றும்

அந்த நிமிட மௌனம் கூட எனக்கு... ஆண்டாண்டு காலமாய்

நான் அடைந்து கொண்டிருக்கும் மரணவலிதானடி....

காதலிக்க தெரியாத உன்னை காதலித்ததால் காமெடியன் ஆகிவிட்டேனோ...

என் ஆண்மை உன் முன்னாள் வெட்கப்படுகிறது ...
ஏனென்று தெரியாமலே?

என் ஆணவத்திமிரை உன்னிடம் மட்டும் காட்ட மறுக்கிறது..
என்னை அறியாமலே?

காமேடியனோ, கயவஞ்சகனோ உன் நினைவில்...

என்னை பொறுத்த வரை

இன்றும் என்றும், உன் மௌனத்தின் முன்னால் கூட அடிமைக்காதலனாய் அடியெடுத்து நடக்கும் ...

என் அன்பை நீதான் இழந்து விட்டாய் .. நானல்ல...

எழுதியவர் : காளிதாசன்... (12-Dec-11, 5:12 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 205

மேலே