முடிவை தேடி ஓடுகிறேன்...



அவள் என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால்...

என் சுவாதீனம் செயலிழக்க வாய்ப்பேதும் இல்லை...

முழுமனதாய் காதலித்தால்...

எனக்காக நான்
விழித்த நாட்களை விட

அவளின் மனம் புதைத்து...

விழித்த நாட்களே அதிகம் என்றால் ஆச்சர்யபடுவதற்கில்லை..

என்னில், என் நினைவுகளில் ஊறிப்போனது அவள் முகம்...

கடுங்குளிரிலும் குளம்தனில் வாழும் மீனிற்கு
குளிருமா என்ன?

அவளுக்காக மாற்றங்கள் என்னில் ஏராளம்...

நின்றால், நடந்தால், உறங்கினால், விழித்தால் இப்படி அத்தனை நிகழ்வுகளும் ...

அவளுக்கு பிடித்தமானதாய்..

இடுகாட்டினில் புதைக்கபடுவதை போல் ....

என் காதல் காரணமின்றி புதைக்க பட்டது ..... அவள் மனம்தனில்...

அந்த நாள்.....

என் அழிவும் ஆரம்பமானது ...

அதுவரை ........

என் இதய தோட்டத்தில் மனம் வீசிய ரோஜா பூ...

எருக்கம் பூவாய் மாறிப்போனது...

இப்புவியில் கானா வெள்ளமென நீரோட்டம் என் கண்ணீராய்...

அவள் இதய அணையை உடைக்க என் கண்ணீரின் அளவு போதவில்லை...போலும்...

பாவபட்டவனாய் பயணித்தேன் ... பள்ளத்தாக்கு பாதையில்...
வழியெங்கும் துரோகிகளின் முகங்கள்...

பயனற்று போன பாதையில் தான் அவளுக்குமான பயணம்

என்னை ரசித்தவள்...

என்னை எதிர் நோக்குகையில் முகம்தனை திருப்பிகொண்டாள்.. அவளின் கோப கணைகளில்...

என் இதயம் சாம்பலானது...

என் வளர்ச்சி பாதையில் பாசிகளாய் அவள் பாசமற்ற நேசம்
வழுக்கியது...

கொஞ்சம் கொஞ்சமாய் வீழ்வது தெரியாமல் வாழ துடித்தேன்
அவளோடு மட்டும்...

என்கேள்விகளே என் மனசாட்சியிடம் விடை சொன்ன விதம்
என் தனிமை இரவுகளை நரகமாக்கியது,...

தவிப்பின் பரிதாப அலைகளின் சங்கமமாய் அவள் முன் நின்றேன்... அவள் இதயத்திற்கு பதிலாய் கல்லை சுமப்பதாலோ...

என் ஈரக்குலையை துவைத்து பிழிந்து விட்டால்...

மௌனத்தின் சான்றாயிருந்து.....
இன்றளவும்

முடிவே தெரியாமல் முடிவை தேடி ஓடுகிறேன்...
வெறுக்கப்பட்ட அவளின் நிழலின் பின்னாலும் கூட...


எழுதியவர் : காளிதாசன்... (12-Dec-11, 5:44 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 197

மேலே