அற்று போனதா மனிதம்...



போர்க்களமாய் போன வாழ்வினில்...

திரும்பி பார்க்கிறேன்... கடந்து வந்த பாதையை...

மனிதாபிமானம் அற்றவர்களின் குருதி பிளம்புகள்...

கண்ணிற்கு தெரிகிறது....

பசியின் பிடியில் சாலையோரம் கிடக்கும் ....

முதியவரை ,, தாண்டி செல்லும் மனிதனின் மனிதாபிமானம் அவன் தேடி ஓடும் வேலையின் அவசரத்திற்கு விலை போகிறதா?

கண்ணில்லா குருடன் கைநீட்டி பிச்சை கேட்கையில் அவன் நம்மிடம் கேட்கவில்லை என்பது போல் தத்தளிக்கும் மனித கால்களில் மனிதாபிமானம் சோடை போனதா?

அரை நிர்வாண நிலையில் அரைமனிதனாய் முச்சந்தியில் நிற்கும் பைத்தியத்தை கண்டு அருவருத்து ஒதுங்குவதில் மனிதாபிமானம் அம்முச்ச்சந்தியின் கடைக்கோடியில் ஒளிந்து கொண்டதா?

பேருந்து நிலைய சுவரொட்டி விளம்பரத்தில் ஒட்டப்பட்ட நடிகையின் கவர்ச்சி பதிவில் கண்கள் ஆழ்ந்து உற்றுநோக்கின் பயனேதுமுண்டோ?

கண்கூர்ந்து அரை நொடியேனும் காலத்தை பிரயோஜனமின்றி சுவரொட்டி அலை பதிக்க செய்யும் மனித கண்களே ....

காண்பவை எல்லாம் உன் கரிசனத்திற்கு உட்பட்டால் உன்னை அறியாமலே உன் மனிதாபிமானம் உன் மனசாட்சியிடம் பேசுமடா...

எழுதியவர் : காளிதாசன்.. (12-Dec-11, 5:58 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 196

மேலே