நட்பு பேசும் ..!
நெடுநேரமாய்
நீயும் நானும்
பேசிக் கொண்டிருக்க
நிறைய கண்கள்
சந்தேகமாய் நம்மை
நோக்கிக் கொண்டிருக்க
ஏதேதோ பேசிக் கொண்டிருக்க
அந்த வழி வந்த
உன் அப்பாவை
நீயும் நானும் சேர்ந்து
அப்பாவென்று கூப்பிட
பேசிய அத்தனை பெரும்
வாயடைத்துப் போயினர்
அவர்கள் காதில்
நம் நட்பு ஏதோ
பேசிக் கொண்டிருந்தது ..!