நட்பின் அழகியே

கோணலான வகிடும், நிமிர்ந்த நடையும்
அழுக்கான அவதூறுகளும், அப்பழுக்கில்லா
மனமும்
குறைந்த நட்பும், நிறைந்த உள்ளமும்
நலிந்த உடலும், வலிந்த சிந்தையும்
ஒளிந்த காதலும், ஒளிவில்லாப் பேச்சும்
ஒருங்கேப் பெற்ற நட்பின் அழகியே,
நீ சென்றதெங்கடி??