பாட மறந்த குயிலே !!!!!!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
கம்பனின் கவிதை கண்டோம் - நல்ல
காவிய சிறப்பு கொண்டோம்
வள்ளுவன் குரலைக்கண்டோம் - வல்ல
வான்புகழ் பேற்றைப் பெற்றோம்
இளங்கோவன் சிலம்பைக் கேட்டோம் - அது
இயம்பிடும் நெறியைக்க் கேட்டோம்
இளையவன் பாரதிதன்னின் இனியவோர்
பாடல் கேட்டு இதயமே நெகிழநின்றோம்
அவரோ கவிமகளின் கவினதை கவிதையால்
கவின்செய்து நமை வென்றால் - இன்று
இவரோ கவிமகளின் கவிமனதை புதுக்கவிதை பெயராலே கொலைசெய்து நம்மை கொன்றார்
அவர்கள் பாடி பறந்த குயில்கள்,
இவர்கள் பாட மறந்த குயில்கள் !!!!!!!!!!
கண்டவுடன் எண்ணமதை சுண்டிவிடும் விழியதனை
கொண்டதனால் அவள் நல்ல கயழே !
நின்றவுடன் நெஞ்சமதை வென்றுவிடும் நடனமதை
கொண்டதனால், அவள் நல்ல மயிலே !
சென்றவுடன் கவிமனதை அள்ளிவிடும் துள்ளலதை
கொண்டதனால், அவள் நல்ல மானே - அந்தோ
கொன்றுவிடும் வரதட்சணை வேலோன்று பாய்ந்ததனால்
நின்று விடும் மணத்தாலே - அவளோ பாட மறந்த குயிலே !!!!!
கண்டவுடன் கொண்டவனை கொண்டுவிடும் மான்பதனை
கொண்டதனால், அவள் நல்ல மனையாள்
நின்றவுடன் நெஞ்சமதை கொஞ்சுகின்ற சேயதனை
ஈன்றதனால் அவள் நல்ல தாயே !
சென்றவுடன் எதிர்கொண்டு செந்நெறியில் வரவேற்று
செழுங்கிளையை ஒம்பலில் நல்ல இல்லாள்
அந்தோ ,
கொன்றுவிடும் மதுநங்கை ,கொண்டவனை கொண்டதனை
கண்டவுடன் குனவதுயால் கலக்கமுற்றாள் -அதனால்
கண்ணிருந்தும் கருமேகம் காணாத மயிலானால்
பண்ணிரிந்தும் தன்மகவை பாடாத குயிலானால் !
பாடமறந்த குயிலே , அந்தோ
ஆடமறந்த மயிலே ! - மனம்
சாடமறந்த பரியே ! - பூசை
சாத்த மறந்த பூவே ! - நல்ல
நாதம் இழந்த குழலே ! - ஓதும்
வேதம் இழந்த மறையே! - வல்ல
கீதம் இழந்த பண்ணே ! - நீதான்
நாதன் இழந்த பெண்ணே !!!!
நாதன் இழந்த பெண்ணே - நீதான்
பாட மறந்த குயிலே !!!!!!!!!!!!!!!!!!!!
இவண்
டாக்டர்.வை.கலைவாணன்