ஏமாற்றம் தான்
பார்வையை தூதக்கினேன் ***
பதுமையே உன்னை
பார்த்து வரச்சொல்லி,
தேடித்தேடி அலைந்து ---
"திருவிழாவில் தொலைந்த காலணியாய்
தென்படவில்லை" - என்று
தேம்பித்தேம்பி துடித்தன - என்
தேடல் விழிகள் !!!
தரைதொடும் அருவியாய்,
தாரகையே உன் கூந்தலின்
தனிவாசனையால் கண்டு கொள்ள - என்
மூச்சினை தூதாக்கினேன் ***
---முடியாமல் போக மௌனித்தது
சற்று நேரம் சுவாசிக்காமல் !!!
வார்த்தைகளை தூதாக்கினேன் ***
வதுவே உன் செவியில் முத்தமிட்டு - அதன்
நாளத்தில் என் நினைவுகளை உனக்கு
நினைவுபடுத்த --- நெடுந்தூரம்
நாடியும் எட்டாததால்
நொண்டியாகி நின்று விட்டன !!!
கனவை தூதாக்கினேன் ***
எழில்மிகு உருவாய் உனைப் பார்க்க,
---வேறவனைக் காட்டி
அதை களைத்துவிட்டாய் !!!
விழித்துவிட்டேன் உன்
ஏமாற்றத்தின் உறக்கத்திலிருந்து ....