படிப்பு படிப்பு...
![](https://eluthu.com/images/loading.gif)
கொஞ்சிக் குலாவி தட்டி எழுப்பி
பரபர வென பல்தேய்த்து
அள்ளிக் கொட்டி குளிக்க வைத்து
அரக்கப் பறக்க வாரித் திணித்து
பள்ளி சீருடையில் நுழைத்து
பின் இருக்கையில் அமர்த்தி
சாலையில் வாகனத்தை விரட்டி
இழுத்துச் சென்று உள்ளே விட்டு
திரும்பிப் பார்த்து டாட்டா சொல்லும்
கையசைவிர்க்கு காத்திருந்து,
திரும்புகையில் அப்பாடா என்றாகிவிடும்...
எனக்கும் குழந்தைக்கும்..!