கிராமத்துக்காரி...

தவறவிடுகிறேன் தாவணி பாவடையே...

சலனப்படுத்தாத உன் உடையழகு...

சிலிர்க்க வைக்கும் மாயமென்ன?

காதோரம் கவி பாடும் உன் ஜிமிக்கி ஆட்டத்தினில்தான்

எத்தனை வளைவு நெளிவுகள்....

எக் கடைதனில் கள் குடித்ததோ!

உன் ஒற்றை ஜடை ரிப்பன் கூட கட்டியிளுக்கிறது

என் கள்ளமிலா ஆண்மைதனை...

உன் எண்ணம் என்ன வண்ணபூக்களா

உன் ஜாக்கெட்டில் டிசைன் பூக்கள்...

உன் நெற்றியிட்ட வட்டபொட்டு பௌர்ணமி நிலாவா..

மஞ்சள் பூசிய உன் முகம்தனில் மயங்குகிறேன் நானுமடி...

எழுதியவர் : காளிதாசன்... (24-Dec-11, 5:14 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 255

மேலே