நண்பனின் மணவாழ்க்கை
காத்திருப்புகள் எல்லாம்
கானல் நிராய் போனதே என்று
கவலை படாதே நண்பா
மங்கை ஒருத்தி
மணமேடை ஏறி
மாங்கல்யம் பெற்று
மடிமேல் உன்னை
மழலையாய் தவள விடுவாள்
பதமாய் சமைத்து
பக்குவமாய் பரிமாறி
உன் அன்னையை மிஞ்சுவாள்
தோல்விகளால் துவளுபோது
தோள்கொடுத்து அறுதல் கூறுவதில்
தோழியாகவும்
அர்த்தமே இல்லாமல்
அரட்டை அடிப்பதை
அலச்சியம் செய்யாமல்
பொய்யாய் ரசிப்பதில்
காதலியாகவும்
உனது சாயலை
அடுத்த சந்ததிக்கு
எடுத்து செல்வதில்
மனைவியாகவும்
பருவம் பார்த்து
கருமம் அறுவதில்
தாதியாகவும்
உன் மொத்த உறவுகளையும் மறந்து
அத்தனை உறவுகளையும்
மொத்தமாக அவளிடமே காண்பாய்
அடுத்த ஜன்மத்திலும்
அவளே வேண்டும் என்று
ஆலயம் சென்று
ஆண்டவனிடம் கேட்க்கமாட்டாய்
அவளிடமே மண்டியிட்டு
கேட்பாய்