கண் கண்ட தெய்வம்

கருவறையில் இருக்கும் பொது
கண் விழித்து இருப்பாள்
நீ கண் விழிக்கும் வேளையிலே
நித்திரையில் இருப்பாள்
சித்திரமாய் உன் முகத்தை மனதிலே பதிப்பாள்
புதியதோர் பிறப்பெடுத்து உனக்காக வாழ்வாள்
பெண்ணாக நீ பிறந்தால் அலங்கரித்து பார்ப்பாள்
ஆணாக நீ பிறந்தால் தன்னை மறந்து ரசிப்பாள்
இறைவன் கூட தாயை போல நெருங்கியதில்லை
தாய் இருக்கும் தருனத்தால் இறைவன் தெரிவதில்லை

இத்தகைய மனம் படைத்த அன்னையே!
உன்னை நினைக்கையில் மறப்போம் எம்மையே!

எழுதியவர் : suriyanarayanan (26-Dec-11, 4:06 pm)
பார்வை : 265

மேலே