பொய்

உரசிப் போகிறது மேகம்...
கலைக்க முயல்கிறது காற்று....
ஈடுபாடே இல்லாத நீளத்தில்
மூழ்கியிருக்கிறது வானம்....
அதன் பாதம் வருடுகிற கடற்கரையில் ...
என் கவிதை காகிதங்கள் .....
சில துள்ளி திரிந்தன..
நான் காகிதம் அல்ல கவிதை என்று...
சில கடலில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டன...
"இவனுக்கு போய் வாழ்க்கைபட்டோமே" என்று
சில சுருண்டு கிடக்கின்றன
சுண்டல் எண்ணெயோடு ...
சில..சிறுவர்களின் விளையாட்டு பந்தானது...
சில காலடிச்சுவடு தாங்கி
யாரேனும் பார்பார்கள் என...
ஒன்று மட்டும் அவள் கையில்....
படிக்கிறாள்..ரசிக்கிறாள்....
பேனா எடுத்து தன் பெயர் எழுதுகிறாள்....
என் கவிதை தோற்றதாய்
உணர்கிறேன் அவளின் கிறுக்கல் முன்....
எவனோ ஒருவன் வருகிறான்
அவனிடம் நீட்டுகிறாள்
"இது என் கவிதை" என்று .....
அழகான பொய்க்கு வழிவிட்டு செல்கிறேன்...
யாரிடமும் சொல்லவில்லை....
அது என் கவிதை என்று.......

எழுதியவர் : (26-Dec-11, 4:03 pm)
Tanglish : poy
பார்வை : 245

மேலே