இரண்டாம் கவிதை

உன்னை நினைத்து
என் முதல் கவிதை எழுதினேன்....
தயங்கி தயங்கி
உன்னிடம் நீட்டினேன்...
மயங்கி மயங்கி வாங்கினாய்.....
அதை வாசிப்பாய்
எனை நேசிப்பாய்
என நான் காத்திருக்க.....
நீயோ அதை வாசித்தாய்
சற்று யோசித்தாய்
பின்பு யாசித்தாய்..என்னிடம்
"இது யார் கவிதை"?-என்று
முதல் கவிதை உன்னிடம் நிற்க
இரண்டாம் கவிதை
இந்த நிமிடத்தில் நெஞ்சை இடிக்கிறது ....
"கவிஞர்கள் கவிதையை
தேடிக் கொண்டிருக்க
இங்கோ
ஒரு கவிதை
கவிஞனை தேடிக் கொண்டிருக்கிறது..."

எழுதியவர் : (26-Dec-11, 3:34 pm)
Tanglish : irandaam kavithai
பார்வை : 270

மேலே