திருமண அழைப்பிதழ்
உனக்கென்ன சிரித்து விட்டாய்..
உன் எற்றுப்பல் வெண்மை
என் நெஞ்சில் மின்னலாய்
நுழைந்ததை அறியாமலே....
உனக்கென்ன பார்த்து விட்டாய்
உன் பால் பார்வையில்
நான் பொங்கி வழிவதை அறியாமலே...
உனக்கென்ன திருமண அழைப்பிதழ் தந்தாய்....
வாழ்த்து சொல்ல வந்திருந்தேன்...
என் இதயம் இறந்து விட்டதை
அறிந்தும் அறியாமலே ......