எதுவும் சாத்தியம் ,,,.....

வெற்றியை விரும்பும்
தோள்களுக்கு
அருகம்புல்லும்
ஆயுதம்
நெற்றி வியர்வை
சிந்தினால் எதுவும்
சாத்தியம்

முட்களுக்கு முத்தமிட்டால்
ரோஜாக்கள்
உனக்கு
முடியும் முழக்கமிடு
சந்தேகம் எதற்கு ?

விழுந்தவன் கால்கள்
எழுந்து நடந்தால்
நிலமும் கூட நிலவு தான்

கண்கள் அழுதே கிடந்தாள்
நினைவு கூட கனவு தான்

தோல்வி உன்னை தொடர்ந்து
வரும்
தொட்டு விட நினைத்து
விடும்
எட்டு வைத்து
மீதேறு
தோல்வி உன் தேறு

வெள்ளை தேவதைகளுக்கு
விதவை என்று
பையர் வைத்தான்

கொள்ளை காதலுக்கு
சாதி என்று
சுவர் வைத்தான்

முல்லை குழந்தைகளுக்கு
தாலி கயிர் வைத்தான்

ஒரு சொல்லை சொல்ல வந்தாலோ
புரட்சி என்று தடை விதித்தான்

தடை விதிப்பவனுக்கு விடை கொடுக்காதே
நல்ல விடை கொடு

உலகை மாற்ற
உன்னை மாற்றி விடு
உன்னை மாற்றி
உலகை மாற்றி
விடு

அவமானச் சொற்கள்
சுடும் போது
தங்கமாய் உன்னை
உருக்கு

உளிகள் வலிகளாய்
படும்போது
சிலையாய் உன்னை செதுக்கு

நத்தைக்கு கூடு சுமை அல்ல
பறவைக்கு சிறகு சுமை அல்ல
உனக்கு வாழ்க்கை சுமையா ...
உணராமல் இருந்தால் வாழ்க்கை சுவையா !

விடியும் என்று நம்பு
வெளிச்சம் நிச்சியம்
முடியும் என்று நம்பு
வெற்றி நிச்சியம்

நடந்து -போ பாதை
தூரம் தான்
இமையத்திர்க்கு
போகவும்
முதல் அடி தேவை தான்

எதுவும் சாத்தியம்
என்று இருந்தால்
உன் பெயர்
நாளைய சரித்திரம்

எழுதியவர் : priyan (26-Aug-10, 10:16 pm)
சேர்த்தது : ravanan
பார்வை : 2004

மேலே