நாடக குடும்பம்..

சித்தரிக்கப்பட்ட நாடகத்திற்கு

சித்திரமாகிபோனேன் நான்...

சிதறாமல் நான் குடியிருந்த

உன் சிறு இதயத்தில்...

என் நினைவை அளித்ததன் நியாயமென்ன..

கடுகளவு குறையேனும் என் காதலில்

கண்டாயோ நீ...

ஆனாலும் நம்பிவிட்டாய் உன்

மனசாட்சியிடம் மன்றாட மாட்டாமல்..

பூட்டிவிட்ட இதயமா உன்னில்

திறக்க மாட்டாமலும்...

உடைக்க மாட்டாமலும்...

அல்லலுறும்.. என் குமுறல்

அறியாதவள் போலே அழகாய்

நடிக்கிறாய் ....

கைவந்த கலையா உனக்கும், உன் உறவிற்கும்

நடிப்பதுவும், பொய் நவில்வதுவும்...

எழுதியவர் : காளிதாசன்... (28-Dec-11, 4:45 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 252

மேலே