நடைபிணம்
உன்னை காதலிக்க எனக்கு
காரணம் தெரியவில்லை அன்று
நீயும் சம்மதித்தாய் மனமுவர்ந்து
காதல் என்னும் புது உலகில்
என்னையே நான் மறந்து உன்வசப்படேன் பெண்ணே
காதலித்த நீ மணவறைக்கு வருவாயென்று
காத்திருந்தேன் கைகளில் மாலையுடன்
நீயும் வந்தாய் என்னைத்தேடி
மாலை சூடினேன் உன் கழுத்தில் மனமாளையாக அல்ல உன் இறுதி மாலையாக காரணம்
என்னக்காக நீ உன் உயிரை பிரிந்தாய்
உன் பெற்றோரை எதிர்த்து இன்றும் நான் வாழ்கிறேன் காதலியே உன் நினைவில் நடைபிணமாக காரணம் நீ கொண்டுபோனது என் இதயத்தை மட்டுமே உன்னுடைய இதயத்தை என்னிடம் ஒப்படைத்து என் இதயத்தை நீ கொண்டு சென்றாய் இன்று உனக்காக நான் வாழ்கிறேன் உன் இதயத்தை வாழவைக்க.