***என் உயிர்தோழிக்காக...***

என்னை மறந்திடு!

எனக்கும் உனக்கும் சரிவராது என்று நீ சுலபமாக சொல்லிவிட்டாய்.

என்னால் அவ்வளவு சீக்கிரம் உன்னை மறக்க முடியவில்லையடி.

என் உதடுகள் சொல்கிறது உன்னை மறந்திடு என்று - ஆனால்

என் மனம் இன்னும் உன் நினைவுகளை

சுமந்து உன் பிரிவால் துடிக்கிறது.
.
எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்

உள்ளம் திறந்து உண்மை வடித்து உணர்வுகள்

கொட்டி தோள் சாய்ந்திட உன்னையே நாடும் என்மனம்.

இதையும் நீ அறிவாயடி தோழியே !

என்னை... மறந்து நீ இருந்திட துணிந்தது சரிதானா?

நீ என்னை விட்டு பிரிந்து செல்வதுதான் உனக்கு சந்தோசம் என்றால் பிரிந்து செல்.

நான் உன்னை தடுக்கமாட்டேன்.

நீ போகும் போது உன் அழியா நினைவுகளை என்னுடன் விட்டுத்தான் செல்கிறாய் என்பதை மறவாதே!

ஆசையில் நான் உன்மேல் கொண்ட பாசத்தில் நேசத்தில் வந்தது வேதனை மட்டும் தான்.

அதனால் என் நெஞ்சமும் ஆனது வேதனையில்.

நீ என்னுடன் பேசாத பொழுதுகளிலும் என் மனம் உன்னுடன் பேசத் தான் துடிக்கிறது _ ஆனால்
நீ கடைசியாக பேசிய வார்த்தைகள் என் இதயத்தை பலமுறை அழவைக்கிறது.

என் இதயம் அழுதாலும் உன்னை ஒருபோதும் வெறுத்ததும் இல்லையடி
விலகிச்செல்ல நினைத்ததும் இல்லையடி. .

நீ என்னை விட்டு சென்றாலும் உன் நினைவுகள் என்னை விட்டு விலகாது
உன் அன்பு முகம் தினமும் வந்து போகுமடி

என் கண்களில்........... நீ என்னை மறந்த பொழுதும் நான் உன்னை மறக்கவில்லையே!!!!!!!!!!

இன்பம் துன்பம் சரிபாதி நட்போடு காத்திருக்கிறேன்.........**************

***அன்புத்தோழி saya .....*** .

எழுதியவர் : saya (29-Dec-11, 4:27 pm)
பார்வை : 432

மேலே