தோழமைக் காற்றே 1 B2

காற்றே....
நீ என்ன அந்தரங்கத் தோழனா.....?
அனுமதியின்றி அறையில் நுழைகிறாய்
அரவமின்றி தாழிடுகிறாய்....

சில்லெனப் பட்டு மேனி சிலிர்க்கிறாய்...
சிகையை தொட்டு கோலமிடுகிறாய்
ஆடையில் ஆடி ஆவல் கொள்கிறாய்...
ஆரவாரமின்றி அன்பில் குழைகிறாய்

துவண்ட என்னுள்ளம் கண்டு
அகன்ற உன்கரங்கள் கொண்டு
அணைத்திட நீ வந்தனையோ...?
உன் தோழமை அன்பு கண்டு
என் தூரிகையும் நெகிழ்ந்ததின்று .......

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (30-Dec-11, 8:20 pm)
Tanglish : kaatre
பார்வை : 706

மேலே