கருவரைக்கொலை

விதை போட்டவன் நீ..
விலைமகளின் நிலத்தில்..

மழைக்காக அவள் காத்திருக்கவில்லை..
நிலத்தின் ஊற்றே அவள் கண்களில் கண்ணீராய்..

விதை முளைப்பது தெரிந்து
அதை வதைக்க நினைத்தாள்..

ஒன்றும் அறியாத சிசு
கொசுவைக்கொல்வது போல எளிதாகிவிட்டது..

இது என்ன பூஞ்செடியா..
பிடுங்கி பிடுங்கி நடுவதற்கு..

வீட்டின் அறையை சுத்தம் செய்வது போல் ..
கருவறை சுத்தமும் எளிதாகிவிட்டது..

நீ விளைமகளாய் இருக்கிறாய்
உன் வறுமையின் காரணமாய்..

ஆனால் விளையும் எதிர்க்காலத்தை உன்
நிகழ்காலத்துக்காக அழிக்காதே..

எழுதியவர் : priyaprakash (30-Dec-11, 9:06 pm)
சேர்த்தது : priyaprakash
பார்வை : 223

மேலே