புது வசந்தமே வருக புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டே 2012 வருக - நல்ல
புதுமைகளை கொண்டு தருக !

கடந்த வருட நினைவுகளோடு - புது
ஆண்டில் வசந்தத்தை தருக !

வசந்த கால எண்ணங்களோடு - இன்னும்
வைகறை தென்றலாய் வீச வருக !

இனிமையான ஆண்டாக 2012 ய்
எல்லோருக்கும் ஆக்கி தருக !

கோர விளைவுகளை தவிர்த்து
நல்ல நிகழ்வுகளை கொண்டு தருக !

முடிவில்லா பிரச்சனைகளுக்கு நல்ல
முற்று புள்ளி கொண்டு வருக !

வளமான உலகத்தையும் - நமது
பாரதத்தையும் நிலையாக்கி தருக !

புத்தாண்டே வருக !
புது வசந்தமே வருக !


புத்தாண்டு வாழ்த்துக்களுடன் .........

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (31-Dec-11, 1:20 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 901

மேலே