பார்வை ஒன்றே போதுமே....

விடுமுறை அன்று கூட - நான்
வீட்டில் இருந்தது இல்லை ,,
உன் வீட்டருகே விரிந்து பரந்த - அந்த
மைதானமே எனது கதி.....
உன் வீட்டு மொட்டைமாடியை
கண்டுகொண்டே நான் காய்ந்து நிற்ப்பதற்கு,
எரிந்து எரிந்து கரிந்து கிடக்கும் - அந்த
சிகரெட் துண்டுகளே சாட்சியாகும் ...
காலையில் மாடத்து செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற நீ மேலே வரும்போதும்
துவைத்து வைத்த துணிகளை
உலர வைக்க நீ அங்கு வரும்போதும் .
பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிதர நீ மேலே வரும் போதும்,
பக்குவமாக உன்னை பார்க்க எண்ணி
பரபரப்புடன் அங்கு காத்திருப்பேன்..
பலமுறை உனை பார்த்திருப்பேன் - என்
பருவநிலவே ஒருமுறை உன் பார்வைபடாத என
உருகி உருகி நின்றுகொண்டிருக்க
உன் உள்ளம் உருகாமல் போனதேனோ ?
கணநேரம் நீ எனை கண்டுவிட்டால்
சில்லென்று ஆகிவிடுகிறது என் மனது..
எதேட்சையாக நீ பார்த்துவிடு என்று ,
ஏங்கி நிற்கிறது அந்த வேப்பமரம் - அது
ஏங்கி நிற்க காரணமும் நீ தான்
ஏனென்று கேட்க்கிறாயா ?
கவனிக்காமல் நீ சென்றால் நான்
துக்கத்தில் துளையிடுவது அதன் மேல் தானே !
கையசைத்து என் காதலை சொல்லலாம் ,
கண்ணடித்தும் என் காதலை சொல்லலாம் ,
சத்தமிட்டும் என் காதலை சொல்லலாம் ,
பறக்கும் முத்தமிட்டும் என் காதலை சொல்லலாம்.
கண்டவனும் காட்சி கண்டு உன்னை
கண்ணடபடி பேசிவிட்டால்
கள்ளமில்லா கன்னி உள்ளம்
கலங்கிடும் அது கூடாதே .
காத்திருந்து காத்திருந்தே என்
காலங்கள் போனாலும் மனம்
கவலை கொள்ளவில்லை - என்
காதலை நீ ஏற்பாய் என்ற நம்பிக்கையால் ......
என் காத்திருப்புகள் கனவாகி போனாலும்
இதே காதலோடு மீண்டும் பிறப்பேன்
மறுஜென்மத்திலும் உன்னை என்
மணவாட்டியாய்க் காணமட்டும்.....