நட்பு

பயணங்கள் பாதை மாறுதே...
வார்த்தைகள் ஊமையானதே ....
தோள்களும் உன் கைகள் தேடுதே ....நண்பா
இனி என் கண்கள் தினமும் உன்னை தேடாதா?
இனி பூங்காற்றும் உந்தன் குரலை தாங்காத?

நட்பின் முகவரியில் ..உந்தன் பேர் எழுதி
இறைவன் அனுப்பி வைத்த
மடலும் நீயோ?
எந்தன் நிழலையும் பேணும் நண்பன் நீயோ?

விண்ணோடு முகிலும் வைத்துள்ள பந்தம்
அது மறைந்து போகுமா?
மண்ணோடு மழையும் உறவாடும் சொந்தம்
அது மறிந்து போகுமா?

இந்த புல், பூவும், பறவையின் கீதமும் மாறாதே....
உன் பிரிவால் நம் நட்பின் புரிதலும் மாறாதே..

கண்ணில் வரும் இரமெல்லாம்
மனதிலே தோன்றுகின்ற வலிகளின் மொழியாகும் ....
உந்தன் கரங்கள் தோள்களில் சாய்கையிலே
வலி யாவும் வழிந்தோடும் ……
மனம் மகிழ்ந்திடுமே …..
இதோ இதோ இந்த பயணத்திலே ..இதமான உறவொன்றை ….வரமாக கொண்டேனே ..

பயணங்கள் பாதை மாறுதே ….
நட்பிலே நாட்கள் நகருதே
நினைவுகள் ….என்னை செலுதுதே …..நண்பா ……

எழுதியவர் : வ. ர. பிரதீப் (3-Jan-12, 10:47 pm)
Tanglish : natpu
பார்வை : 501

மேலே