என் நண்பன்

பெண்ணொடு நட்புற்றால்
பெருநஷ்டம் வருமென்று
பெரும்பாலோர் ஒதுங்கி நிற்க
வெறும் நட்போடு வந்தவனே!!

காசில்லா நேரத்திலே
கல்வி எதற்கு பெண்ணுக்கென்று
வீட்டில் எல்லாரும் சொன்னாலும்
பகுத்தறிவு அவர்கூட்டி
காந்தி படம் போட்ட காகிதத்தால்
வாழ்நாள் வெளிச்சம் தந்த பகலவனே!!

காதல் உண்டோ இருவருக்கும்? - என்று
நம் பெற்றொரே கேட்ட பின்பும்
கண்ணியமாய் நட்பை சொல்லி
அவர் கருத்துதனை மாற்றிட்டாய்

சகோதரனோ நீயென்று
நண்பர் கூட்டம் கேட்டபோதும்
இல்லையென்று மறுத்திட்டாய்
அதற்கும் மேல் நட்பென்று உணர்த்திட்டாய்

கன்னியின் என் காதலினை
கண்ணாளன் அறியுமுன்னே - என்
கள்ளச்சிரிப்பில் கண்டுகொண்டாய் - என்வாயால்
காதலையும் சொல்லவைத்தாய்

அவனை பற்றி தெரிந்து கொள்ள -அவன்
நண்பனை பற்றி கேட்கச்சொன்னாய்
உன் நண்பனாக அவன் இருந்ததினால்
என் காதலனாய் ஆகிவிட்டான்

உன்னை போலவே காதலியை
எப்படியடா தேர்ந்தெடுத்தாய்?
உன் காதலுக்கு சம்மத்தத்தை
என்னிடம் வந்து சொல்லுகின்றாள்

கேனச்சிறுக்கி நானென்று
கெட்ட வார்த்தை சொன்னதுண்டு
அதில் பெண்ணடிமை தெரியவில்லை
உன் பேரன்பு தெரிந்ததடா!!

தொலைபேசியில் மணிக்கணக்காய்
பேசினால்தான் நட்பென்றால்
கர்ணன் எதைக்கொண்டு வளர்த்திட்டான்??
நட்பென்னும் நன்றிக்கடனை!!

தோளோடு தோள் உரசி
நின்றால் தான் நட்பாமோ?
அழுதபோது உன் கைகுட்டை
தண்டனையின்போது உன் செருப்பு
பாராட்டும் போது கைகுலுக்கல்
இது தவிர வேறு தெரியாது
நம் நட்புக்கு

அடுத்துவரும் ஜென்மத்தில்
ஒரு கருவறையில் இரட்டையாய் நாம் பிறப்போமா?
அங்கிருந்தே நட்பாவோம்
நட்பு தீயில் மகர தீபம் ஏற்றிவைப்போம்!!

எழுதியவர் : உமா ராஜ் (3-Jan-12, 11:42 pm)
பார்வை : 530

மேலே