நட்பு இனித்துக் கொண்டிருக்கிறது

என்
புகைப்பட ஆல்பத்தை
புரட்டிக் கொண்டிருந்தேன் ...!

ஆறு மாசக் குழந்தையாய்
அழகாய் குப்புறக் கிடந்து சிரித்தது..!

ஆறு வயசில் பள்ளிக்கு செல்கையில்..
அம்மாவை அணைத்தபடி எடுத்தது..!

ஒலிம்பிக்கில் ஓடி உற்சாகமாய்
ஒரு தங்கப் பதக்கம் பெற்றபோது எடுத்தது...!

ஒய்யாரமாய் என் திருமணத்தில்..
ஒளி மாங்கல்யம் அணிகையில் எடுத்தது..!

என் குழந்தைகளோடு பூங்காவில்
எழிலாக அமர்ந்து எடுத்தது.......!

ரிடையர் ஆகும்போது சக ஊழியர்கள்
ரிவார்டு கொடுக்கும் போது எடுத்தது......

சென்ற வாரம் என் பேரப் பிள்ளைகளோடு
சென்னை மெரீனா பீச்சில் எடுத்தது......!

எல்லா புகைப்படத்திலும் நான்
என் சிரிப்பை என் முகத்தில் கண்டேன்.....!

மூன்றே மூன்று புகைப்படத்தில் மட்டும்
என் சிரிப்பை மனசுக்குள் உணர்ந்தேன் ....!

ஒன்று : அந்த ஆறு மாசக் குழந்தை போட்டோ
ரெண்டு: பள்ளியில் என் நண்பர்களோடு எடுத்தது
மூன்று: கல்லூரியில் தொடங்கி இன்று வரை
என் நண்பர்களாக இருப்பவர்களோடு எடுத்தது...

நண்பர்களே.........
உங்களால் மீண்டும் நான் குழந்தையாகிறேன்...!

என்றோ ஒரு நாள் ஒரு நண்பன்
பாதி சாக்லேட்டை கடித்துக் கொடுத்தான்....

சாக்லேட் சுற்றியிருந்த பேப்பரை.....
பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.......

ஒரு புகைப்படத்துக்குள் அதுவும் இருந்தது.....

நட்பு எப்போதும் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது

அன்புடன் ஹரி

எழுதியவர் : (5-Jan-12, 10:09 am)
பார்வை : 437

மேலே