கைபேசி மரணதேவனின் மறு உருவம் .....

கைபேசி உன் கண்ணாளனின் உயிரை
களவாடி சென்றதை நீ - உன்
காதோடு கேட்க்கும் நிலை
கொடுமையிலும் கொடுமை தான்.
அவன் உன் காதோடு கதைகள் பேசிக்கொண்டே
இருக்கவேண்டும் என நினைத்த நீ
அவன் உயிர் உன் கைபேசியில் இருப்பதை
அறியாமல் போனதால் வந்த நிலை இது...
வாகனங்களில் செல்லும் வேளை
கைபேசியில் அழைப்பொலி கேட்டு
கவனமின்றி கதைக்கும் மனிதர்களே ?
அது மரணதேவனின் அழைப்பு என்பதை மறந்துவிடாதீர்கள் ..........