அசத்தும் ஆண்களே.....
ஆண்களின் பருவங்கள்.....
சுட்டியான
குழந்தை பருவம்
குறும்பு கலந்த
பள்ளி பருவம்
கட்டுபாடுகளை
கலைக்க நினைக்கும் விடலை பருவம்
கலக்கலான
காதலுடன் பள்ளி பருவம்
அலுவலகத்தில் கம்பீரமான
அதிகாரி பருவம்
ஆண் மகனாய்
ஆளுமை செய்யும் கணவன் பருவம்
கட்டுபாடுகளை விதிக்கும்
கண்டிப்பான தந்தை பருவம்
பொறுப்புகளை முடித்து
பொக்கை வாய் சிரிப்பில் தாத்தா பருவம்
குலத்தை காக்க வந்த ராஜா
ஜான் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை
அரசாள
ஆண் பிள்ளை என
பிறப்பிற்கு
பெருமை சேர்த்து
அசத்தும் ஆண்கள்
ஆண்டாண்டு காலமாய்
அனைவரையும்
ஆளுமையோடு
ஆண்டு வந்தாலும்
அந்தி பருவத்தில்
ஆளுமை செய்த
மனைவியின் மடியில்
ஒரு மழலை தான்........