வேரில் பழுத்த பலா

நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்....

நிஜமான் அவனிருக்க....
பொய்மான் தேடுகிறாள்....
நெடுந்தொடர் பார்க்கின்றாள்...
நிஜமாக நினைக்கிறாள்..

குதூகல குடும்ப வாழ்க்கை...
அன்பகலா அன்யோன்யம்...
வாய்க்கவில்லை....சலிக்கிறாள்....
விளம்பரம் பார்க்கின்றாள்...
வியந்துதான் போகிறாள்...

சின்ன சிணுங்கலுக்கே...
கணையாழி தரும் கணவன்..
காபியோடு துகிலெழுப்பும் ....
காந்தமுக காதலன்...
வாய்க்கவில்லை....சலிக்கிறாள்....

பிள்ளைக்காகவே வாழும் பெற்றோர்...
தாயைக் காக்கும் தனையன்....
தங்கையைத் தலைமேல் தாங்கும் தமக்கை...
குடும்பம் காக்கும் குலவிளக்கு...
இவர்களின் துன்பம்..... தன் துன்பம்....
என்றுருகிப் போகிறாள்....

அபியும் அண்ணாமலையும்....
கோபியும் செல்வியும்.....
குடும்பத்தின் அச்சாணியாய்....
வைரநெஞ்சத்தோடு...
தங்கமாய் ஜொலிக்கும்....
அழகை சொல்லிச்சொல்லி மாய்கிறாள்...

தொடரினிலே....?
மாமியார்...அம்மா..!
மாமனார்....அப்பா...!
நிஜத்தினிலே...?
வருவாயை வருங்காலமென...
வாரிசின் வளர்ச்சிக்கே செலவழித்து...

இன்று...?
தேனில்லா தேனடையாய்..!
பாசத்திற்கு ஏங்கும் விழியினராய்..
பரிதவித்த மனத்தினராய்....
அவன் அம்மா...! அப்பா...!

கவிஞர் வார்த்தையில்...
கேட்பாரின்றி கிடக்குதம்மா....
வேரில் பழுத்த பலா...

நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்....

எழுதியவர் : மீரா ஆதிரை (5-Jan-12, 10:22 pm)
பார்வை : 332

மேலே