சுமி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

(சு) த்தமான அன்பை தருவாள் - நெஞ்சில்
சு (ம) ந்து வாழ்பவள் தலைமகனாய் என்னை !
சக (தி) இல்லா நேசம் கொண்டவள் .
சொத் (தே) எனக்கு அவள்தான் என்பேன் .
எழுத்து (வி) ல் கிடைத்த என் இனிய சகோதரி...

(பி) ழை இல்லா சொல்லாக - புதிதாய்
பி (ற) ந்து வந்த மலராக
வச (ந்) தகால நதியான உன்னை
வாழ்த் (த) எனக்கும் வயதுண்டோ ?

(நா) ளெல்லாம் உன் உடன்பிறப்பாய் !
உ (ள்) ளமெல்லாம் உன்நினைவாய் !

வாழும் ஒரு உயிர்ஜீவன்
உடன்பிறவா உறவானவன்
அன்புத்தம்பி ஈஸ்வரனின்
அன்பான ( வாழ்த்துக்கள் ) .....................



ஆண்டு நூறு கடந்து நீ
என்றும் நலமாய் மகிழ்வாய் வாழ
எனது வாழ்த்துக்கள் அக்கா.......

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (6-Jan-12, 11:47 am)
பார்வை : 1770

மேலே