எல்லோரும் மனிதரே...
![](https://eluthu.com/images/loading.gif)
ராம் என்பவர் அலுவலக உதவியாளர் . அவருக்கு வயது சுமார் 55 . அங்கு வேலை செய்பவர்கள் வயது சுமார் 21 லிருந்து 30 வரை இருக்கலாம் . தினமும் அவரை , வா, போ , டீ கொண்டு வா , அது வாங்கி வா , என்று கட்டளையாகவே சொல்வர். அவர் வயதுக்கு மரியாதையை கொடுக்க மாட்டார்கள். நான் மட்டும் அவரை மரியாதையாகவே கூப்பிடுவேன். அவரிடம் நன்றாகவே பழகுவேன். ஒரு நாள் என் மேலாளர் என்னை கூப்பிட்டு அவனுக்கு சமமாக பழக கூடாது என்று அரை மணி நேரம் அறிவுரை சொன்னார். அவருடன் பழகினால் மற்ற employees நம்மை மதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
ஆனால் என் மனதில் என் வீட்டில் யாரும் படிக்கலை அதனால் அவர்களும் இது போல வேலைதான் செய்கிறார்கள் . அவர்களும் இது போலத்தான் நடத்த படுவார்கள் என்று புரிந்தது . இருந்தாலும் மேலாளரை மதித்து ok என சொல்லிவிட்டு சென்றேன் .
ஆனால் எப்போதும் போல அவரிடம் பழகுகிறேன் . என்னை போல் ஒருவன் என் வீட்டில் உள்ளவருக்கு மன ஆறுதல் தருவான் என்ற நம்பிக்கையில் ....