பணம் கொள்வோம் நல்ல மனம் கொண்டு !
![](https://eluthu.com/images/loading.gif)
நல்ல மனம் கொண்டவருக்கு
பணம் கொள்ளாது கையில்
எண்ணம் குன்றியவர்க்கு - இந்த
பணம் சேர்வது தான் இன்னும்
உழைப்பால் மட்டுமே - இதை
ஈட்டுவது என்பது இயல்பு
குறுக்கு வழியில் பெறுவதே
இன்னும் சிலரின் இலக்கு
பணம் பத்தும் செய்யும் - இந்த
முகவரி வாழ்க்கையின் பக்கங்கள்
இல்லாதவன் இதை பகிர்ந்து கொள்வான்
இருப்பவன் பல மடங்கு ஆக்குவான்
மனம் ஒட்டிகொண்டால் - இன்னும்
நல்ல மாற்றம் தரும்
பணம் ஒட்டிக்கொண்டால் - நல்ல
மனதை மாற்றி அமைத்து விடும்
பணம் கொள்வோம் - நல்ல
மனம் கொண்டு உலகில் ............ !
-ஸ்ரீவை.காதர் -