விடுதலை
என் விடுதலை
புத்தகத்தில்
என் பக்கங்கள்
மட்டும்
சிறை பிடிக்கப் பட்டன .....
ஜன்னல்
கம்பிகள் விடுதலை
தந்தது
வெளியே பார்க்க மட்டும் ....
எனக்கு
பாதைகள்
அதிகம்
பயணங்கள் தான் ....
குறைவு
நான் கனவு
காண்பேன் அனால்
உறங்கியது
கிடையாது .....
நான்
கலாச்சாரத்தால்
தடுக்கப்படும்
நாகரிகம்
நாகரிகத்தால்
மூழ்கடிக்கப்படும்
கலாச்சாரம்
என்னை விதைத்தவர்கள்
விலங்கு
பூட்டினார்கள்
நான் வளர்வதற்கு முன்பே......
நான்
13 வயதில்
3 மாதம்
சுமக்கிறேன்
நான் வளர்ந்த
குழந்தையா ....
வளர்க்கும்
தாயா....???