என் தாலாட்டு...!!

ஆராரோ ஆரிரரோ தாலாட்டு ஒன்னு நா பாட.
ரத்தினமே நீ கேட்டு கண்ணுறங்கி இந்த நாளை இனிதாய் முடித்திடு.
பாத்து மாதம் பத்திரமா உன்னை போகிஷமாய் காத்திரிந்தோம்.
நள்ளிரவில் விழிக்கும் எந்தன் விழிகள் சற்றும் சிமிட்ட மறந்து உன்னை ரசிபதேனோ…!!!
அழகு பிள்ளை கண்ணுறங்கும் வேளையிலே ஓடி வரும் வெண்ணிலவே.
அவள் கன் விழிக்குமுன்னே வேறு திசை ஓடி போவதேனோ…!!!
என் வேண்டுதலை ஏற்று வந்த வைரம் அம்மா நீ.
ஒரு நொடியும் திவிட்டாத அமிர்தமடி நீ.
தத்தி தத்தி நடக்கும் ஒவ்வொரு அடியும் பிரமாண்டம் தானே.
கையில் சிக்கிடாமல் ஓடுகையில் நீ புள்ளி மானடி.
கேட்டாமல் முத்தம் வேய்கையில் நீ மழலை சாமி தானடி.
நீ அர்த்தம் இன்றி அழுதாலும் என் நாடி நடுங்கி போகுதே.
அடி நீ சத்தம் இன்றி சிரித்தாலும் விண்மீன்கள் விழுகுதே.
என்ன செல்லமான பூ உன்னை வாடாமல் காப்பேன்னடி.
காணத நாள் வந்தால் மடிந்தே போவேனடி.
நீ வளர்ந்தும் பச்சிளம் பிள்ளையே என் பார்வையில் நிற்பதேனோ.,
முத்தமிழியின் வாடை படாத நான்,
என் முழு நிலவு உன்னை என் எழுத்தில் வரைந்தேனடி..
படைப்புகள் எல்லாம் உனக்கென படைத்தேன்..
இருப்பதும் கூட உனக்கென மட்டும்..
உயிர் நீ இன்றி உயிர் ஒன்று எதற்கு..
நான் தனிமையில் நின்றால் இடி என் தலையினில் முட்டும்.
அந்த இடியினை முட்டிட இந்த அப்பனுக்கு உதவிடு.....!!!

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (10-Jan-12, 11:23 pm)
பார்வை : 365

மேலே