எல்லோருமே என் நண்பர்கள்
எல்லா பிரச்சனைக்கும்
ஏக மனதான தீர்வு என்ன ?
என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி..!
எல்லோரும்
எழுதித் தள்ளினார்கள்....
ஏழு பக்கம் எட்டு பக்கம்.......!
எனக்குத் தோன்றியது
என்னவோ ரெண்டே ரெண்டு வரிகள்...!
எல்லோரையும் மாற்றுங்கள்
இனிய நண்பர்களாய் -
எல்லா பிரச்சனைக்கும்
எளிய தீர்வு அது.....
எழுதி முடித்துக் கொடுத்த எனக்கு
முதல் பரிசு மேடையில்.........! மேடை விட்டு
கீழே நான் இறங்கிய போது......
மேடையில் இருந்தவர்கள் மட்டும் அல்ல
எல்லோருமே என் நண்பர்கள் ஆனார்கள்..!