வேறென்ன தகுதி வேண்டுமடா? நானிங்கு தலைக்கனம் கொள்வதற்கு! தமிழன் என்பதற்கு மேலாக இந்த உலகத்தில் வேறேதும் இருக்கிறதா?

இன்னொரு முறை நான் பிறந்தாலும்
இந்தியனாகவே பிறப்பேனே!
இந்தியன் என்கிற இறுமாப்பில்
இறுதி வரையிலும் இருப்பேனே!

வேறென்ன தகுதி வேண்டுமடா?
நானிங்கு தலைக்கனம் கொள்வதற்கு!
தமிழன் என்பதற்கு மேலாக
இந்த உலகத்தில் வேறேதும் இருக்கிறதா?

வடபக்கம் இமயத்தை சுவரென எழுப்பி...
மறுபக்கம் அனைத்திலும் முக்கடல் நிரப்பி...
நடுவினில் தானே அவதரித்தாள்... எங்கள் INDIAN MOM...

மறுபக்கம் அனைத்திலும் போர் பல தொடுத்தும்...
மரிக்கின்ற நேரத்தில் நீரள்ளி கொடுக்கும்...
மழலையை போன்றாள் எங்கள் தாய்.. எங்கள் INDIAN MOM...

Rap:
தகிட தகிட நடமாடும் வார்த்தைகள்
குறுக்க நெடுக்க ஒன்று சேர்ந்தால்
அது ஹிப் ஹாப்
எனும் புதிய இசை...
இது இளைய தலைமுறையின்
ஆழ்மன ஓசை...
எனதாசை...
என்தமிழ் பாஷை....
உலகெங்கிலும் எட்டிட ...
தன்கொடி நட்டிட...
ஒரு விதையாய்...
விநாயக சுழியாய்...
இன்று நிஜமாய் மாறிய கனவாய்...
கரடு முரடு பாதை நடந்து கடந்து,
விழுந்து எழுந்து அழுது தொழுது தினம் தினம்,
விரையமாகும் விரச தாப உடல்களின்,
வியர்வைநாளம் முழுதும் பொங்கும் அமிலமாய்,
உடலும் உயிரும் கொழுந்து விட்டெரியும்,
இந்தியன் என்ற இறுமாப்பு இருக்கு
இந்தியன் என்ற இறுமாப்பு இருக்கு
எம்மை சீண்டி பாக்க நெனச்சா ஆ...
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அரிது அதில்
அறிய தமிழ் குடியில் பிறந்தேன் வளர்ந்தேன் புதுமைகள் புரிய
தமிழின் புகழது உலகெங்கும் அறிய
நில்லேன் அஞ்சேன் எவர் வரின் தயங்கியே
உள்ளதை சொல்வேன் உயிருள்ள வரையிலே
என் தமிழ் உலகின் முதலது என்று
கற்றது கை மண் என்றாலும் நன்று
உலகிற்கு அனைத்தையும் கற்பித்தவன் தமிழன்
என்ற அந்த ஆணவத்தில் இருப்பவன் இத்தமிழன்!
Indian I'm an I'm an Indian Guy...
When I say this somethin that will happen Inside...
It's a sort of Power... You can change the world forever...
Proud to be an Indian Guy...
This is the patriotic song i made for our india...
pls send your critics...
$aM

எழுதியவர் : sameer (13-Jan-12, 5:05 pm)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 338

மேலே