நீயே சொல் ... என் உயிர் தோழி .

எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....

உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ...

"இப்படித்தான் வாழவேண்டும்" என்று

என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...

அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...

உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க

என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....

இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன்

உன் விருப்பப்படி - ஆனால்.....

அதை ரசிக்கத்தான்

நீ இப்போது என்னுடன் இல்லை....

இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?

நீயே சொல் ... என் உயிர் தோழி .

எழுதியவர் : ம.கஸ்தூரி (16-Jan-12, 6:42 am)
சேர்த்தது : மகாகஸ்தூரி
பார்வை : 555

மேலே