ஏய் குட்டிப் பெண்ணே!

ஒரு அன்னை தெரசாவோ?
அல்ல அல்ல
அவள் ஒரு கல்பனா சாவ்லாவோ?

ஒரு மர்லின் மன்றோவோ?
அல்ல அல்ல
அவள் ஒரு ஐஸ்வர்யா ராயோ?

அங்கும் இங்கும், அறியாமை என்ற பெயரில்.
கொன்றுகொண்டுதான் இருக்கிறார்கள்
அந்த "அவள்"கள் முளைக்கும்முன்பே
.
கருவிலேயே நீ கலைந்திருக்கலாம்
ஏய் குட்டிப் பெண்ணே!
எம் கண் எதிரே கள்ளிப்பால் குடிக்கும்முன்னே!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (18-Jan-12, 4:43 am)
பார்வை : 257

சிறந்த கவிதைகள்

மேலே