உள்ளேயேட்
வருடத்திலோ 365 நாட்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
ஒரு சில நாட்கள்
நெஞ்சிலே வடுக்களாய்...
நெஞ்சின் வடுக்கள்
வேர் விட்டு
கிளையிட்டு, மொட்டுமிடுகிறது
துயரத்தை நீர் ஊற்றுவதால்
மனதோடு அழுது...
பல நாட்கள் மகிழ்ந்திருந்தும்
பட்சி போல் பறந்திருந்தும்
பட்டியிலிடுகிறது மனம்
சில நாட்களை மட்டுமே....
மனம் அழுது அழுது
கண்ணீராய் வெளியேறுகிறது....
சில நிமிடச் செய்திகளை
பல நிமிடம் பேசியே
பழகிய நாம்
பழுத்த கிழங்களை நோகடித்து
பழமையில் உழல்கிறோம்....
கடப்பது காலம் மட்டுமல்ல
தேவையற்ற நிகழ்வுகளும் தான்
எதிலும் பழமை வேண்டாம்
வேதனையாகும் போது....
உள்ளேயேத் தீயிட்டு கொளுத்துங்கள்
உள்ளம் கொதிக்காமல்
உள் வேதனைகளை....