கவிதை நிலா .........

நச்சத்திரங்களின்
தேவதை ......

கவிஞர்களின்
கரு ......

அழும் மழலைகளுக்கு சோறுட்டும்
இரண்டாவது தாய் .......


காதலர்களுக்கு
கவி தரும் வான் கவி ......


நண்பர்களுக்கு
துயில் தரும் வெண்மதி .......

பாட்டியை இராட்டை சுற்றவைத்த
தமிழ் விஞ்ஞானி ......


மெய் மறந்து ரசிக்கவைக்கும்
முழு மதி ......

குறையில்லா அழகு கொண்ட
இயற்கையின் பிறை .....

இந்திரனும் ஆச்சரியப்படும்
அழகு சந்திரன் .......

இன்னும் சொல்லிலடங்கா
வார்த்தைகள் உதயாமகிக்கொண்டிருக்க

அதோ நீந்திச் செல்கிறது வெண்ணிலா ....
மேகத்தில் ........இல்லை .....இல்லை ......
நாணத்தில் ..........

எழுதியவர் : ப.ராஜேஷ் (20-Jan-12, 4:29 pm)
Tanglish : kavithai nila
பார்வை : 2729

மேலே