பேசி விடு தோழியே...........

நீ விலகி நிற்கும்
காரணம் நன்றாகத்
தெரிந்தும் ....

ஏனோ உன்னை
பிரிய மறுக்கிறது
என் மனது ....

தாயை விட்டு
நீங்கா
பிள்ளை போல ......


நீ பேசாதிருக்கும்
அர்த்தம் நன்றாக
புரிந்தும் .......


உன்னிடம்
பேசிடத்துடிக்கிறது
என் உள்ளம் ......

சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லிடும்
கிளிப்பிள்ளையாய் .....

நீ பார்த்தும் பாராது செல்லும்
விஷயம் அறிந்தும்
உன் பார்வையில் படும் படியாக
வந்து வந்து நிற்கிறேன் .....


வயிற்று பசிக்காக
சோறு போடுபவர்களை
தேடிச்செல்லும் பிச்சைகாரனாய்......

என் தவறுக்கான தண்டனயையை
வார்த்தைகளால் கொடுத்து
விடு ......

மாறாக என்னுடன் பேசாமல்
வலிகளால் கொடுக்காதே
தாங்க முடியவில்லை ...

நிம்மதியாய்
தூங்க
இயலவில்லை .......

தோழியே தயவு செய்து
பேசிவிடு........

நின்ற நம்
நட்பை மீண்டும்
சுவாசிக்க ....

உன் மௌனம் கலைந்து
நம் நட்பிற்கு
மீண்டும் உயீர் கொடு........


என்னோடு பேசிவிடு .......
தோழியே பேசிவிடு ......

எழுதியவர் : ப.ராஜேஷ் (20-Jan-12, 7:45 pm)
பார்வை : 864

மேலே